அண்மைய செய்திகள்

recent
-

லடாக் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழக மாணவி....


தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் லடாக் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் காவியா. இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். என்சிசி மாணவியான இவருடன் நாடு முழுவதிலும் இருந்து 18 மாணவிகள், லடாக் சிகரத்தில் ஏற தேர்வு செய்யப்பட்டனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு மாதம் மலையேற்ற பயிற்சி பெற்ற பின்னர், ஜூன் 19-ஆம் திகதி, பனி படர்ந்த கடுமையான வானிலை கொண்ட லடாக் மலையில் ஏற முயற்சி மேற்கொண்டனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் சிகரத்தில் ஏறி 18 மாணவிகளும் சாதனை படைத்தனர்.

லடாக் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழக மாணவி.... Reviewed by Author on August 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.