சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? தெளிவுபடுத்துவாரா?
20ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் போது, மாகாண சபைகளின் அதிகாரத்தை கொழும்பு அரசிடம் தாரை வார்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
20ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர்,
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மாகாண சபைகளின் காலம் முடிவடைந்து விட்டால் சபையை நீடிப்பதற்கு மாகாண சபைகள் சட்டத்தில் இடமில்லை. அதன் பின்னர் ஆளுநரின் ஆட்சியை நடைமுறைப்படுத்தலாம்.
சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்படும். அல்லாவிடின் அரச தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சபையைக் கொண்டு வந்து நீடிக்க முடியும்.
20ஆவது திருத்தம் கொண்டு வரப்படும் பொழுது அது மாகாண சபைகளின் அதிகாரத்தை அல்லது பலத்தை கொழும்பு அரசிடம் தாரை வார்ப்பத்தற்கு இடமளிக்கக் கூடாது.
மாகாணசபைத் தேர்தலை பிற்போடவும், புதிய தலைவர்கள் தெரிவு செய்வதை தவிர்க்கவும், தேர்தல்களை இரு வருடங்களுக்கு நடத்தாமல் இருக்கவும் மாகாண சபைகளை கட்டுப்படுத்தவும், கொழும்பின் அரசுக்கு அதிகாரத்தை கொடுப்பது என்பது ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றல்ல.
மாகாணச பை தேர்தல்களை பிற்போடும் யோசனையின் ஊடாக மாகாணசபை முறைமையை கட்டுப்படுத்தும் முறையொன்று கொழும்பு அரசின் கீழ் வருகின்றமை தெளிவாகின்றது.
தேர்தல்களை பிற்போடுதல், தேர்தல்கள் இல்லாமல் மாகாண சபைகளை கொண்டு நடத்துதல், மாகாண சபையைக் கலைத்து கொழும்பு அரசின் ஊடாக மாகாண சபைகளை நிர்வகித்தல் என்பன ஜனநாயக பண்புகளைப் பறிப்பதாகவே அமையும்.
அதிகாரப் பரவலாக்கலை வேண்டி நிற்கும் அனைத்து மாகாண மக்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும், தனது நிலையை பொதுமக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? தெளிவுபடுத்துவாரா?
Reviewed by Author
on
August 11, 2017
Rating:

No comments:
Post a Comment