வாய் துர்நாற்றம், மூட்டுவலிக்கு! கரும்புச் சாற்றை இப்படி குடியுங்கள்....
கரும்புச் சாற்றில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
உஷ்ணம் அதிகமாவதால் காய்ச்சல், வாய் உலர்ந்து போகுதல், நாவறட்சி, அதிக தாகம் ஏற்படுதல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
கரும்பு சாற்றை குடித்து வந்தால் பித்தத்தை குறைத்து, வாய் துர்நாற்றத்தை போக்கி, வயிற்று புண்களை குணமாக்கும்.
உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், வயிற்றுபோக்கு பிரச்சனையை சரியாக்க உதவுகிறது.
கரும்புச் சாற்றை எப்படி குடிக்கலாம்?
- சோற்றுக் கற்றாழையின் சதை பகுதியுடன் எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு ஆகிய இரண்டையும் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் உணவின் மீதுள்ள நாட்டம் குறையும்.
- 2 ஸ்பூன் தயிருடன் சிறிது கரும்பு சாறு சேர்த்து குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலி, சிறுநீர் எரிச்சல் போன்ற சிறுநீரக கோளாறுகள் சரியாகும்.
- ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை நசுக்கி, அதனுடன் கரும்பு சாறு கலந்து வடிகட்டி குடித்து வந்தால் உஷ்ணத்தால் ஏற்படும் அடிவயிற்று வலி, குடல்புண் சரியாகும்.
- லவங்கப்பட்டையை தூளாக்கி, அதில் 1/2 ஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து காலை, மாலை என்று ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால், மூட்டுவலி பிரச்சனை வராது.
வாய் துர்நாற்றம், மூட்டுவலிக்கு! கரும்புச் சாற்றை இப்படி குடியுங்கள்....
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment