இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்....
தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கைத் தமிழன் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
51ஆவது ஆசிய ஆணழகன் போட்டி தென்கொரியாவின் சோல் நகரில் அண்மையில் நடைபெற்றது.
இதில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் என்ற இளைஞன் மிஸ்டர் ஏசியா(Mr.ASIA) மகுடத்தை வென்றுள்ளார்.
குறித்த போட்டியில் 26 நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்....
Reviewed by Author
on
August 30, 2017
Rating:

No comments:
Post a Comment