மடுஅன்னையின் திருவிழா கடும்மழையினால் இன்றே நிறைவுற்றது.....பக்தர்களுக்கு ஏமாற்றம்...(படங்கள்)
மறைமாவட்டம் மன்னார் – மடு ஆலயத்தில் நாளை 15-08-2017 நடைபெறவிருந்த மடு மாதாவின் விண்ணேற்புத் திருவிழாவை கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாகக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதேசத்தில் நிலவியுள்ள கடும் மழையுடனான வானிலை காரணமாக மடு ஆலய வளாகம் உட்பட அண்மித்த பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், திருவிழாக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ். எமிலியானுஸ் பிள்ளை தெரிவித்தார்.
மன்னார் அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையிலான குருக்கள் குழு இன்று பிற்பகல் தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது.
விசுவாசிகள் தங்கியுள்ள ஆலய வளாகம் மற்றும் அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், வழக்கமான வழிபாடுகள் நடைபெறுவது சாத்தியமற்றதால் மாலை நடைபெறவிருந்த வழிபாடு நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், வானிலை மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு நாளை திருநாள் திருப்பலி பற்றிய விபரங்களை உரிய நேரத்தில் அறிவிப்பதற்கும் குருக்கள் குழு தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து, மடு மாதா விண்ணேற்புத் திருவிழாவிற்காக வருகை தந்திருந்த விசுவாசிகள் மீண்டும் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதாகவும் மடு ஆலய பரிபாலகர் மேலும் தெரிவித்தார்.
வருடந்தோறும் ஆவணி 15 ஆம் நாள் நடைபெறும் மடு மாதா விண்ணேற்புத் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ விசுவாசிகள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மன்னாரில் மடுதிருப்பதியில் வரலாறு காணத மழை திருவிழா நிறைவுற்றது இதற்கு காரணம் இயற்கையின் சீற்றமா....
இல்லை பக்தர்களின் பக்திக்குறைவான செயற்பாடுகளா....
தற்போதய சூழலில் மடுத்திருப்பதிக்கு வருகின்ற சிலபக்தர்கள் மடுப்பதியின் புனிததன்மையை மாசுபடுத்துகின்ற கலியாட்ட செயற்பாடுகளிலும் விசுவாசமின்மையும் பொழுதுபோக்கு நிகழ்வாகவும் கருதி செயற்படுவதால் தான் இவ்வாறான தொரு வெள்ளப்பெருக்கு நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது எனதோன்றுகின்றது.
இலங்கையின் எல்லாப்பாகத்திலிருந்தும் எல்லோரும் ஒன்றுகூடி கொண்டாடும் ஆவணி 15 திருவிழா மன்னாரில் முதல்தடவையாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது கவலைக்குரியதும்..... வியப்புக்குரியதும்..... ஆகும் ஏனெனில் வழமையாக திருவிழா காலத்தில் மழை பெய்வது வழக்கம் ஆனால் இப்படியல்ல.....
கடந்த தினங்களுக்கு முன்புதான் ஒரு இளம்பெண் மின்னல் தாக்கி மடுத்திருப்பதியில் இறந்தார். இந்த விடையங்களை எண்ணிப்பார்க்கும் போது மடுஅன்னை நமக்கு ஏதோ ஒரு முன்னறிவிப்பை அறிகுறியாக காட்டுகின்றார் போல் தோன்றுகின்றது.
மழையின் வெள்ளம் காரணமாக பக்தர்களின் நலன்கருதி 14-08-2017 இன்றே கடைசி ஆசீர்வதம் வழங்கப்பட்டு திருவிழா நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி நாளை 15-08-2017 காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
மடுஅன்னையின் திருவிழா கடும்மழையினால் இன்றே நிறைவுற்றது.....பக்தர்களுக்கு ஏமாற்றம்...(படங்கள்)
Reviewed by Author
on
August 14, 2017
Rating:

No comments:
Post a Comment