மன்னார் 'மாந்தை சோல்ட் லிமிற்றெற்' நிறுவனத்தின் புதிய அலுவக கட்டிடம் அடிக்கல் நாட்டி வைப்பு.(படம்)
மன்னார் 'மாந்தை சோல்ட் லிமிற்றெற்' உப்பு உற்பத்தி நிறுவனத்தின் புதிய அலுவக கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், குறித்த நிறுவனத்தின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அரச சுற்றுலா விடுதி திறக்கும் நிகழ்வும் இன்று(27) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாந்தை சோல்ட் லிமிற்றெற்றின் தலைவர் எம்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டு மன்னார் மாந்தை சோல்ட் லிமிற்றெற் நிறுவனத்தின் புதிய அலுவக கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்ததோடு, புதிதாக அமைக்கப்பட்ட அரச சுற்றுலா விடுதியினையும் வைபவ ரீதியாக திற்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாந்தை சோல்ட் லிமிற்றெற் நிறுவனத்தில் பல வருடங்களாக கடமையாற்றிய பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, அவர்களுடைய பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் 'மாந்தை சோல்ட் லிமிற்றெற்' நிறுவனத்தின் புதிய அலுவக கட்டிடம் அடிக்கல் நாட்டி வைப்பு.(படம்)
Reviewed by Author
on
August 28, 2017
Rating:

No comments:
Post a Comment