வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 9 மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
திகுவி கல்விச் சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.நகர பகுதியில் அமைந்துள்ள ஜெட்விங் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.
இப்புலமைப்பரிசில் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 5 மாணவர்கள் கனடாவிற்கும், 4 மாணவர்கள் மலேசியாவிற்கும் உயர் கல்விக்காகச் செல்லவுள்ளனர்.
குறித்த நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண அமைச்சர் சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட திகுவி கல்விச் சேவை நிறுவனத்தின் அதிகாரிகள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு
Reviewed by Author
on
August 28, 2017
Rating:

No comments:
Post a Comment