கனடா Scarborough பகுதியில் வாகன விபத்து! யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் பலி
கனடா, Scarborough பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Markham Road and Steeles Avenue பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 77 வயதான ஞானபுஷ்பம் செபஸ்தியாம்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர், யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர் எனவும், தற்போது கனடாவில் வசித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை பார்வையிட்ட பின்னர் தனது வீட்டிற்கு திரும்பிய போது இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கனடா Scarborough பகுதியில் வாகன விபத்து! யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் பலி
Reviewed by Author
on
August 30, 2017
Rating:

No comments:
Post a Comment