குடிநீரைப் பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு தடை விதிக்கும் இராணுவம்...
முல்லைத்தீவு, கற்சிலைமடு பிரதேச பொது கிணறொன்றில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு இராணுவம் தடை விதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தற்போது நிலவி வருகின்ற வறட்சியின் காரணமாக முல்லைத்தீவு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் குடிநீருக்கான பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்நிலையில், குறித்த கற்சிலைமடு பிரதேச பொது கிணற்றில் இருந்து தமது குடிநீர்த் தேவைக்காக பொதுமக்கள் நீரைப் பெற்றுக் கொள்ள முனையும் பொழுது இராணுவத்தினர் அதற்கு தடைவிதித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
குடிநீரைப் பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு தடை விதிக்கும் இராணுவம்...
Reviewed by Author
on
August 28, 2017
Rating:

No comments:
Post a Comment