மன்னார் சிலாவத்துறை பிரதேசத்தில் அமைக்கபெற்றுள்ள பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்ட திறப்பு விழா....
மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை பிரதேசத்தில் அமைக்கபெற்றுள்ள பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்ட திறப்பு விழாவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் வைத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின வருகை தந்து இன்று 07-08-2017 காலை 10- 30 மணியளவில் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்த போது அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்திய அதிகாரிகள் அரச அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்னர்.
இதன் போது சிலாவத்துறை வைத்தியசாலையில் பிரதானமாக காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை,
இரத்த பரிசோதகர், போன்ற ஆளணியினை உடனடியாக தீர்த்து வைக்குமாறு பணிப்புரை வழங்கினார்.
முசலி மண்ணின் நீண்டகாலப்பிரச்சினைகளுக்கும் இன்னும் பல பிரச்சினைக்கு தீர்வுகள் விரைவில் கிடைப்பதற்கான வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.
மன்னார் சிலாவத்துறை பிரதேசத்தில் அமைக்கபெற்றுள்ள பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்ட திறப்பு விழா....
Reviewed by Author
on
August 07, 2017
Rating:

No comments:
Post a Comment