பதவி விலகினார் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்!
வட மாகாண சபையின் அமைச்சரவை நெருக்கடியால் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடையே நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவு கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் உடனடியாகவே அனுப்பி வைக்கப்பட்டது. கட்சியின் மத்திய செயற்குழு, அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை அங்கீகரித்து உறுப்பினர்களுக்கு அறிவித்ததும், அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதவி விலகினார் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்!
Reviewed by Author
on
August 07, 2017
Rating:

No comments:
Post a Comment