வடக்கில் ரோந்து நடவடிக்கை தொடரும்! முகாமுக்குள் முடங்காது இராணுவம்...
வடக்கில் நடைபெறும் செயல்களை பார்த்துக் கொண்டு இராணுவம் முகாம்களுக்குள் முடங்கியிருக்காது, வழமையான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
வடக்கில் சட்டத்தை மதிக்காமல் செயற்படும் குழுக்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆவா குழு என்பது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது அல்ல.
இவ்வாறான குழுக்கள் தெற்கிலும் இருக்கின்றனர். இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்புகளுடன் சேர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றார்கள்.
இவர்கள் ஒரு குழுவையோ அல்லது இன்னொரு குழுவையோ சேர்ந்தவர்கள் எனக்கூற முடியாது. அவ்வாறே 1971 மற்றும் 1981 காலத்து குழுவினருடன் தொடர்புடையவர்களும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படப் போகின்றது என்றால் அதற்கு அடிப்படையான நிலைமைகளை கண்காணிக்காமல் நாம் தூங்கிக் கொண்டிருக்கவில்லை.
வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு இராணுவப் பிரிவுகள் பாதுகாப்புக் கடமையில் உள்ளன. வடக்கைப் பொறுத்தவரையில் இராணுவம் முகாம்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
அவர்கள் பாதுகாப்புக் கடமைகளுக்காக வெளியே ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் ரோந்து நடவடிக்கை தொடரும்! முகாமுக்குள் முடங்காது இராணுவம்...
Reviewed by Author
on
August 14, 2017
Rating:

No comments:
Post a Comment