மாரியப்பன் பயிற்சியாளர் சத்யநாராயணாவுக்கு துரோணாச்சார்யா விருது
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனின் பயிற்சியாளரான சத்யநாராயணா பெயர் துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மாரியப்பன் பயிற்சியாளர் சத்யநாராயணாவுக்கு துரோணாச்சார்யா விருது
பிரேசில் நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அவரது பெயர் சமீபத்தில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியார்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதிற்கு பரிந்துரை செய்துள்ள பெயரில் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருடன் மறைந்த தடகள பயிற்சியாளர் காந்தி பெயரும், கபடி பயிற்சியாளர் ஹீர நந்த் கடாரியா பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மறைந்த தடகள பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் காந்தி

வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு ஜி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பேட்மிண்டன்), ப்ரிஜ் பூஷண் மொகந்தி (குத்துச் சண்டை), பி.ஏ. ரபெல் (ஹாக்கி), சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்), ரோஷன் லால் (மல்யுத்தம்) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
தயன்சந்த் விருதிற்கு பூபெந்தர் சிங் (தடகளம்), சையத் ஷாஹித் ஹகிம் (கால்பந்து), சுமராய் டிடெ (ஹாக்கி) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
மாரியப்பன் பயிற்சியாளர் சத்யநாராயணாவுக்கு துரோணாச்சார்யா விருது
Reviewed by Author
on
August 07, 2017
Rating:

No comments:
Post a Comment