மன்னார் வலையக்கல்விப்பணிமனையின் ஏற்பாட்டில் பௌர்ணமி கலைவிழா சிறப்பாக இடம்பெற்றது....
வடமாகாண கல்வி வலையங்களால் மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தன்று நடாத்தப்படும் முழுநிலாக் கலைவிழா நேற்று 07-08- 2017 காலை 9- 30 மணியளவில் மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர் S.சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் தலைமையில் மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை பொதுமண்டபத்தில் கலைநிகழ்வுகளுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
விருந்தினர்களாக....
- திருமதி பிறேமாவதி செல்வின் இரேனியஸ்-மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் வடக்கு மாகாணகல்வித்திணைக்களம்
- திரு.ம.பரமதாசன் பிரதேச செயலாளர் மன்னார்
- சிவஸ்ரீ.தி.கருணாநந்தக்குருக்கள் திருக்கேதீஸ்வர ஆலயம்
- மௌலவி. S.A.ஆஸீம் பேஷ் இமாம் ஜும்மா பள்ளி மூர்வீதி
- அருட்பணி ம.க.அருள்பிரகாசம் பங்குத்தந்தை புனித சிந்தாத்திரை மாதா ஆலயம் மடு இவர்களுடன் மாணவர்கள் ஆசிரியர்கள் கலைஞர்கள் கல்வித்திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மன்னார் வலையக்கல்விப்பணிமனையின் ஏற்பாட்டில் பௌர்ணமி கலைவிழா சிறப்பாக இடம்பெற்றது....
Reviewed by Author
on
August 08, 2017
Rating:

No comments:
Post a Comment