அபார திறமையிருந்தும் அங்கீகாரத்துக்கு போராடும் சாதனை தமிழச்சி...
ஆசியாவிலேயே கால்பந்து போட்டிகளுக்கான முதல் பெண் நடுவர் என அடையாளம் காணப்பட்ட தமிழக வீராங்கனை முறையான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வருகிறார்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரூபாதேவி, பெற்றோர் இல்லாத இவர் சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.
ஆறாம் வகுப்பு முதலே கால்பந்து போட்டிகளில் ஆர்வம் கொண்டு விளையாட தொடங்கிய ரூபாதேவி பிறகு குடும்ப வறுமை காரணமாக அதை நிறுத்தினார்.
ரூபாதேவியின் ஆர்வத்தை புரிந்து கொண்ட பயிற்சியாளர் ஜஸ்டின் அவருக்கு கால்பந்து பயிற்சி கொடுத்து வீராங்கனையாக்கினார்.
ரூபாதேவி மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை நிரூபித்த நிலையில், அடுத்து கால்பந்து நடுவர் ஆகலாம் என முடிவெடுத்தார்.
இதற்கான இரண்டு தேர்வுகளை எழுதிய ரூபா அதில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு 2010ல் பட்டப்படிப்பை முடித்த அவர் தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கால்பந்து நடுவர் வாய்ப்பு ரூபாவை தேடி வந்தது.
முதலில் இலங்கையில் நடந்த ஆசிய கால்பந்து போட்டி தொடரில் ரூபா நடுவராக பணியாற்றினார்.
ரூபாவின் திறமையை பார்த்து ஆசிய கால்பந்து கழகங்கள் அவரை சர்வதேச நடுவராக FIFA கால்பந்து அமைப்புக்கு பரிந்துரைத்தன.
இதற்கான தேர்விலும் வெற்றி பெற்ற ரூபா தென் இந்தியாவின் முதல் சர்வதேச பெண் நடுவராக தெரிவானார்.
2020ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக கால்பந்து போட்டிகளில் நடுவராக பங்கேற்க வேண்டும் என்பதே ரூபாவின் லட்சியமாக உள்ளது.
இவ்வளவு திறமை இருந்தும் அரசு அவருக்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை, ரூபாவுக்கு நிரந்த வேலை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
விரைவில் அரசு ரூபாவின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அபார திறமையிருந்தும் அங்கீகாரத்துக்கு போராடும் சாதனை தமிழச்சி...
Reviewed by Author
on
August 14, 2017
Rating:

No comments:
Post a Comment