அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையை முற்றுகையிடும் ஐரோப்பியர்கள்! நடப்பாண்டில் திடீர் மாற்றம்...


கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை நூற்றுக்கு 1.8 வீதம் என்ற வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் ஜுலை மாதத்தில் சீன சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சியை காண முடிந்துள்ளதாக சபையின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கிழக்கு ஆசியாவில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, ஜுலை மாதத்தில் நூற்றுக்கு 3.8 வீதம் வீச்சியடைந்துள்ளது. குறிப்பாக சீன பயணிகளின் வருகை நூற்றுக்கு 7.1 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

எனினும் கடந்த மாதத்தில் மேற்கு ஐரோப்பாவில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நூற்றுக்கு 3.9 வீத அதிகரிப்பை காட்டியுள்ளது.

நடப்பாண்டின் முதல் 7 மாதத்தில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 15 ஆயிரத்து 926 ஆகும். இந்த எண்ணிக்கை ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது 3.6 வீத அதிகரிப்பாகும்.

அவர்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சீனா, ஐக்கிய ராஜ்ஜியம், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி சபையின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையை முற்றுகையிடும் ஐரோப்பியர்கள்! நடப்பாண்டில் திடீர் மாற்றம்... Reviewed by Author on August 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.