அண்மைய செய்திகள்

recent
-

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் கண்டுபிடிப்பு!


கனடா - அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் பாறைகளுடன் இணைந்து நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் உயிரினம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உயிரினர் கடந்த 2011 ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டதுடன்,கனடாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து அதன் உண்மையான உருவத்தை கண்டறியும் பணி இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில், அந்த உயிரனத்தின் மீது உள்ள பாறைகள் நீக்கப்பட்டு அதன் முழுமையான உருவம் பெறப்பட்டுள்ளது.

110 மில்லியன் ஆண்டிற்கு முன் வாழ்ந்த டைனோசரின் முழுமையான உருவம் கனடா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


அத்துடன், உயிரனம் போரீலொபெல்டா இனத்தைச் சேர்ந்த டைனோசர் இனங்காணப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடிப்பதற்கு 7 ஆயிரம் மணிநேரம் தேவைப்பட்டதாக அருங்காட்சியகத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1300 கிலோ எடையும், 18 அடி நீளமும் கொண்டுள்ளதுடன், இந்த டைனோசர் செம்மண் நிறத்தில் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் வடிவம் மிகச்சிறந்த முறையில் பதப்படுத்தப்பட்டுள்ளதோடு அறிவியல் வரலாற்றில் மிகவும் அழகான டைனோசர்களில் இதுவுத் ஒன்று எனவும் டைனோசர்களின் மோனலிசா என அழைப்பதாகவும் அருங்காட்சியகத்தின் விஞ்ஞானி கலேப் புரவுன் தெரிவித்துள்ளார்.


110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் கண்டுபிடிப்பு! Reviewed by Author on August 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.