பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்: குடும்பத்தினர் அறிக்கை
பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சுரேன் சிவனந்தத்தின் வழக்கு விசாரணையில் குற்றவாளி நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுரேன் சிவனந்தத்தின் குடும்பத்தினர் வழக்கு விசாரணையின் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சிவனந்தன் குடும்பம் சார்பில் லண்டன் பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சுரேன் மிகவும் நல்ல மனிதர். அவ்வளவு அநியாயமான கொடூர மரணத்திற்கு பொருத்தமானவர் அல்ல. இறக்கும் வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். 32 வயதில் சுரேன் கொலை செய்யப்பட்டார். சுரேனுக்கு என்ன நடந்தது? சுரேன் நீ கேட்டு கொண்டிருப்பாய் என்றால், உனது குடும்பத்தினரும், நண்பர்களும் உன்னை கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
நாங்கள் நீண்ட காலமாக அனுபவிக்கும் துன்பத்தை போல, இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் தவறு செய்து விட்டார்கள் என நாங்கள் நினைக்கின்றோம். சுரேன் அனுபவித்த துயரத்தின் காலம் மிக நீண்டதாக இருந்தது. அவர்கள் அந்த 12 மணி நேரம் அவரை துன்புறுத்திய பின்னராவது விடுவித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
சுரேன் நாம் என்றென்றும் உன் பிரிவை உணர்வோம். எப்போதும்! சுரேனை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவருடைய இரக்கம், அவரது உற்சாகம், உயிர்வாழும் தன்மை ஆகியவற்றை நாம் மறக்க மாட்டோம். என் அன்பான சகோதரர் என்னை எப்படி நடத்தினார். என்னுடன் எப்படி நடந்து கொண்டார். என்னுடன் எப்படி பேசினார். எப்போதுமே என்னை சிரிக்க வைத்தார், சில சமயங்களில் கோபமடைந்தார் என்பதையும் மறக்க மாட்டேன்.
அவர் எப்போது பெற்றோரின் நலன்களை முன் வைத்து பார்க்கும் ஒரு அற்புதமான மகன். அவர் பூமியின் முனைகளில் சென்று நட்சத்திரங்கள் அடைய வேண்டும். அவர் எப்போதும் நமது உள்ளத்தில் இருப்பார்.
நமது கண்ணீர் சுரேனை மீண்டும் கொண்டு வரும் என்றால், இந்நேரம் அவர் இங்கு இருப்பார். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்: குடும்பத்தினர் அறிக்கை
Reviewed by Author
on
August 27, 2017
Rating:

No comments:
Post a Comment