அண்மைய செய்திகள்

recent
-

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான அமீர்: 10 விக்கெட் எடுத்து அசத்தல்.....


பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமத் அமீர் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து கவுண்டி சாம்பியன் ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகத் அமீர் எசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் எசக்ஸ் அணிக்கும், யார்க்சைர் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் யார்சைர் அணி 113 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


அடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய எசக்ஸ் அணி 231 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய யார்சர் அணி 150 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், எசக்ஸ் அணிக்கு 33 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

33 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எசக்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் எசக்ஸ் அணி சார்பில் மொகமத் அமீர் முதல் இன்னிங்ஸ் 5 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் 5 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகள் எடுத்து எசக்ஸ் அணியின் வெற்றிக்க் பெரிதும் உதவினார்.

மேலும் இப்போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான அமீர்: 10 விக்கெட் எடுத்து அசத்தல்..... Reviewed by Author on August 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.