உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த இலங்கையின் அதிசய குழந்தை!
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அதிக நிறையுடைய குழந்தையொன்று பிறந்துள்ளது.
சாதனைமிகு குழந்தை நேற்று முன்தினம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் பிறந்திருந்தது.
ஆண் குழந்தையான அந்த குழந்தை 5.94 கிலோ கிராம் (11 இராத்தல்) நிறையை கொண்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கமைய, இதுவரையில் உலகில் பிறந்த அதிக நிறையுடனான குழந்தைகள் தரவரிசையில் இந்த குழந்தை 11வது இடத்தை பிடித்துள்ளது.
அதற்கு முன்னர் 22 இறாத்தல் எடையை கொண்ட இரு குழந்தைகள் அமெரிக்கா மற்றும் இத்தாலியில் பிறந்துள்ளது. 19 இறாத்தல் குழந்தை ஒன்றும் 17 இறாத்தல் குழந்தைகள் இரண்டும், 16 இறாத்தல் குழந்தைகள் மூன்றும், 15 இறாத்தல் குழந்தைகள் இரண்டும் பிறந்துள்ளன.
தற்போது ஹொரவல, ஹபுருகல பிரதேசத்தை சேர்ந்த நதீஷா நில்மினி என்ற பெண்ணுக்கு இந்த அதிஷ்ட குழந்தை பிறந்துள்ளது. 28 வயதான அவருக்கு இது முதல் குழந்தையாகும்.
பலபிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கப்பில விதானாச்சிகே மற்றும் வைத்தியர் தமித நலின் தலைமையினலான குழுவினர் இணைந்து சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக இந்த சிசுவை பிரசவித்துள்ளனர்.
குழந்தையின் நிறை அதிகம் என்பதை 6 - 7 மாதத்திலேயே அறிந்து கொண்டதாகவும், அதற்கமைய ஆலோசனை வழங்கப்பட்டு, சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுளளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சத்திரசிசிக்சை தங்கள் மருத்துவ வாழ்க்கையில் மறக்க முடியாது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த இலங்கையின் அதிசய குழந்தை!
Reviewed by Author
on
August 10, 2017
Rating:

No comments:
Post a Comment