டெல்லியில் உடலில் சேறு பூசி தமிழக விவசாயிகள் போராட்டம்....
டெல்லியில் உடலில் சேறு பூசி தமிழக விவசாயிகள் போராட்டம்
புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம், கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டம் நேற்று 21-வது நாளை எட்டியது. தமிழக விவசாயிகளுடன் இணைந்து புதுச்சேரி விவசாயிகளும் கூட்டுறவு கடன் தள்ளுபடிக்கு கவர்னரின் அனுமதியை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
நேற்று சில விவசாயிகள் தங்களது உடலில் சேறு பூசிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் மற்ற விவசாயிகளும் சேர்ந்து ஜந்தர்மந்தர் சாலையில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.
“ஊருக்கே சோறு போட்ட விவசாயி இன்று பட்டினிக்கு ஆளாகி, சேற்றை அள்ளி முகத்தில் பூசும் நிலைக்கு வந்துவிட்டான்” என்பதை வலியுறுத்தவே சேறு பூசி போராடியதாக போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
இதற்கிடையே டெல்லி சப்தர்ஜங்கில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் போராட்டக்களத்திற்கு வந்து தாங்களே தயாரித்து வந்த மதிய உணவையும், சில பதார்த்தங்களையும் விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.
அந்த குழுவில் இருந்த தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமி என்ற மாணவி விவசாயிகளின் நிலையைப் பார்த்து கண்கலங்கி அழுதார். இதைப்பார்த்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகளும் கண் கலங்கினார்கள்.
இது அந்த பகுதியில் நின்றவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
டெல்லியில் உடலில் சேறு பூசி தமிழக விவசாயிகள் போராட்டம்....
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment