அண்மைய செய்திகள்

recent
-

60 குழந்தைகள் உள்பட 250 பேர் படுகொலை....வன்முறையில்...


காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் நிகழ்ந்த வன்முறையில் 60 குழந்தைகள் உள்பட 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தை சேர்ந்த அதிகாரியான Zeid Raa'ad al-Hussein என்பவர் நேற்று முன் தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள காசை மாகாணத்தில் கடந்த மார்ச் மற்றும் யூன் ஆகிய இரு மாதங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான Kamuina Nsapumilitia என்ற அமைப்பு அப்பாவி மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில், 60 குழந்தைகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வன்முறையை தடுக்க ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடியிலும் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த மாகாணத்தில் நிலவிவரும் சூழலால் மனித உரிமைகள் மீறல் அதிகளவில் நிகழ்ந்துள்ளது பெரும் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.

இம்மாகாணத்தில் நிகழ்ந்த வன்முறையில் இருந்து உயிர் பிழைக்க அண்டை நாடுகளுக்கு சென்ற மக்களிடம் இருந்து இத்தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும், இப்படுகொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்படும் என Zeid Raa'ad al-Hussein தெரிவித்துள்ளார்.

60 குழந்தைகள் உள்பட 250 பேர் படுகொலை....வன்முறையில்... Reviewed by Author on August 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.