புற்றுநோய் இழையங்களை 10 செக்கன்களில் அடையாளம் காணும் பேனா உபகரணம்
புற்றுநோய் இழையங்களை 10 செக்கன்களில் அடையாளம் காணும் ஆற்றலைக் கொண்டுள்ள கையில் எடுத்துச் செல்லக்கூடிய பேனா வடிவ சிறிய உபகரணமொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உரிமைகோரியுள்ளனர்.
இதன்மூலம் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து உடனடியாக அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வது சாத்தியமாவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி மஸ்பெக் பேனா தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோயை 96 சதவீதம் சரியாக அடையாளம் காண முடியும் என அந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
முதல் கட்டமாக மேற்படி பேனா உபகரணம் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இழையத்துடன் தொடுகையுறச் செய்யப்படும். இதன் போது அந்த உபகரணம் குறிப்பிட்ட இழையத்திற்குள் நீர் துளியொன்றை விடுவிக்கும்.
இந்நிலையில் அந்த இழையத்திலுள்ள இரசாயனக் கூறுகள் நீர்த் துளியில் உள்வாங்கப்பட்டதையடுத்து பேனா உபகரணத்தால் அந்த நீர்த் துளி மீள அகத்துறிஞ்சப்பட்டு அந்தத் துளியிலுள்ள இரசாயனங்கள் பகுப்பாய்வுக்குட்படுத்தப்படும்.
தொடர்ந்து அந்த உபகரணம் குறிப்பிட்ட இழையத்தில் புற்றுநோய் பரவியுள்ளதா என்பதை மருத்துவர்கள் அடையாளம் காணும் வகையில் புற்றுநோய்க்கான இரசாயனங்களையும் ஆரோக்கிய கலங்களிலுள்ள இரசாயனங்களை வேறுபிரித்துக் காணக் கூடிய வகையில் பெறுபேறுகளை காட்சிப்படுத்தும்.
அந்தப் பேனா உபகரணமானது ஒரு செக்கன் நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இரசாயனக்கூறுகளை பகுப்பாய்வு செய்யும் ஆற்றலைக்கொண்டுள்ளது.
புற்றுநோய் இழையங்களை 10 செக்கன்களில் அடையாளம் காணும் பேனா உபகரணம்
Reviewed by Author
on
September 09, 2017
Rating:

No comments:
Post a Comment