மன்னார் வங்காலை கடற்பரப்பில் கடற்படை டோறாப்படகு – மீனவர் படகு மோதி விபத்து மீனவர்களை காப்பாற்றாமல் விட்டு சென்றதாக கடற்படைக்கு எதிராக குற்றச்சாட்டு
நேற்று (08-02-2026) மாலை மன்னார் – வங்காலை கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற வங்காலை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடிப் படகு, கடற்படையினரின் டோறாப்படகுடன் மோதியதில் கடும் விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த கடற்படையினர் விபத்துக்குள்ளான மீன்பிடிப் படகையும் அதிலிருந்த இரு மீனவர்களையும் எந்தவித உதவியும் வழங்காமல் அங்கிருந்து சென்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
உயிர் ஆபத்து நிலவிய நிலையில், இரு மீனவர்களும் தங்களின் உயிரைக் காக்கும் பொருட்டு நீச்சல் மூலம் அருகிலிருந்த மற்றுமொரு மீன்பிடிப் படகை அணுகி, தகவல் வழங்கியதன் மூலம் காப்பாற்றப்பட்டு பின்னர் கரைக்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மீன்பிடிப் படகும் அதனுடன் இணைந்த இயந்திரமும் கடுமையாக சேதமடைந்து, தற்போது பாவிக்க முடியாத நிலையில் நொறுங்குண்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Reviewed by Vijithan
on
February 09, 2026
Rating:

.jpeg)


No comments:
Post a Comment