வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 200 ஆவது நாளில் கவனயீரப்பு பேரணி
வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனர்.
இவ் போராட்டம் இன்றுடன் ( 11.09.2017) 200நாளை எட்டியுள்ள நிலையில் தமக்கு நீதி கோரி வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலிருந்து கவனயீர்ப்பு பேரணியேன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
மதியம் 12.30 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கந்தசாமி கோவில் முற்றலில் இருந்து நடைபவனியாக மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்து அங்கிருந்து அவர்களின் போராட்ட இடத்தினை வந்தடைந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் இலச்சனை பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைக் கோரிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 200 ஆவது நாளில் கவனயீரப்பு பேரணி
Reviewed by Author
on
September 11, 2017
Rating:

No comments:
Post a Comment