லண்டனில் தியாகத் தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்
தியாகத் தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் எழுச்சி கொண்டுள்ளது.
லண்டனில் வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள், வீடுகள் மற்றும் ஒரு சில தமிழ் பாடசாலைகளில் தியாகத் தீபம் திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு, மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
திலீபனின் தியாகத்திற்கு மதிப்பளித்து அவர் உண்ணா நோன்பிருந்த அந்த புனித நாட்களில் தாமும் பிறருக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இறங்கியுள்ளனர்.
கடந்த வாரம் மட்டும் சுமார் 48 பேர் இரத்த தானம் செய்துள்ள நிலையில் இன்றும் இரத்ததானம் வழங்குவதற்கு 63 பேருக்கு மேல் தமது பெயர்களை பதிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது. இந்த இரத்ததான நிகழ்வு இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை எட்ஜ்டெயார் கொமியூனிட்டி கொஸ்பிட்டலில் (Edgware Community Hospital, Blood Donor Centre, Burnt Oak Broadway, Edgware HA8 0AD) இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
லண்டனில் தியாகத் தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்
Reviewed by Author
on
September 25, 2017
Rating:

No comments:
Post a Comment