ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3500 படை வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா...
ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3500 படை வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர் குறித்து முந்தைய ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறவும் நினைத்திருந்தார். ஆனால், சமீபத்தில் ராணுவ மையத்தில் உரையாற்றிய டிரம்ப், தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடும் என்பதால் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதில்லை என்றும், போர் நடத்தி வெற்றி பெறுவதே தமது நோக்கம் என்றும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாகப் படைகளை அனுப்பவும் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 3500 படைவீரர்களை அனுப்ப உள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படைகளை எப்போது அனுப்புவது எந்தெந்த முகாம்களில் பணியமர்த்துவது என்பது குறித்த அதிகாரம் பாதுகாப்புத்துறை மந்திரி ஜிம் மேட்டிசுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள படைகளின் எண்ணிக்கையை 8400-ல் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3500 வீரர்கள் ஆப்கானிஸ்தான் செல்ல உள்ளனர். இதன்மூலம், அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை 14500 ஆக உயரும்.
ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3500 படை வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா...
Reviewed by Author
on
September 07, 2017
Rating:
Reviewed by Author
on
September 07, 2017
Rating:


No comments:
Post a Comment