இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்தை பெறும் முதல் மாநிலம்
போக்குவரத்து நெரிசல் இன்றி நெடுந்தூரம் பயணிக்க வழி செய்யும் ஹைப்பர்லூப் ஒன் திட்டம் இந்தியாவில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனம் மற்றும் ஆந்திர பிரதேச அரசிடையே கையெழுத்தாகியுள்ளது.
விஜய்வாடா மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கிடையே ஹைப்பர்லூப் ஒன் வழித்தடம் அமைப்பது குறித்து அமெரிக்க நிறுவனம் மற்றும் ஆந்திர பிரதேச மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில் இந்தியாவி்ல் ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தை பெறும் முதல் மாநிலமாக ஆந்திர பிரதேசம் இருக்கும்.
அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் நிறுவிய ஹைப்பர்லூப் ஒன் திட்டம் இதுவரை உலகின் எந்த நாட்டிலும் மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி துறை மற்றும் அமெரிக்காவின் ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்டேஷன் டெக்னாலஜீஸ் (HTT) நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் திட்டத்தின் மொத்த மதிப்பு குறித்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த திட்டம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மன்ற கூட்டத்தில் ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்டேஷன் டெக்னாலஜீஸ் நிறுவன அதிகாரிகளுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தின் கீழ் சுமார் 35க்கும் அதிகமான தூரத்தை கடக்க ஐந்து நிமிடங்களே போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆந்திர பிரதேச அரசு மற்றும் ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்டேஷன் டெக்னாலஜீஸ் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த மாதம் முதல் சாத்திய கூறுகள் தொடர்பான ஆய்வு பணிகள் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து சாலைளை கட்டமைக்கும் பணிகள் துவங்குகிறது.
இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்தை பெறும் முதல் மாநிலம்
Reviewed by Author
on
September 07, 2017
Rating:

No comments:
Post a Comment