மன்னார் மாந்தை சந்தியில் விபத்து-இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி-மூவர் படு காயம்.(PHOTOS)
மன்னார்-யாழ் பிரதான வீதி, மாந்தை சந்தியில் நேற்று சனிக்கிழமை(23) மாலை 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த சன்முகப்பிள்ளை இதுசன்(வயது-19) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரத்தில் இருந்து 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில், பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது, மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொரியுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
-இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த யாழ்ப்பாணம் ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த சன்முகப்பிள்ளை இதுசன் (வயது-19) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, அதில் பயணித்த திருக்கேதீஸ்வரத்தை சேர்ந்த சதுகரன்(வயது-19),கூராய் மேற்கைச் சேர்ந்த சதீஸ்குமார் (வயது-20), கைதடியைச் சேர்ந்த எஸ்.தமிழ் வானன் (வயது-18) ஆகிய மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த மூன்று இளைஞர்களும் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் வீதி போக்குவரத்து பொலிஸார் சடலத்தை மீட்டனர்.எனினும் விபத்தை ஏற்படுத்திய லொரியை சம்பவ இடத்திற்கு கொண்டு வருமாறு ஒன்று திறண்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதனைத்தொடர்ந்து குறித்த லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்ததோடு,லொரியை மீண்டும் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு கொண்டு வந்தனர்.
-பின் குறித்த இடத்தில் இருந்து குறித்த சடலம் மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
-விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாந்தை சந்தியில் விபத்து-இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி-மூவர் படு காயம்.(PHOTOS)
Reviewed by Author
on
September 24, 2017
Rating:

No comments:
Post a Comment