வவுனியா ஒமந்தையில் பதட்டம் : ஒருவர் வெட்டிக்கொலை : நால்வர் கைது
குடும்பப் பிரச்சனை காரணமாக வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் கணவன், மனைவிக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. குறித்த குடும்பத்தில் கணவன் இரு பிள்ளைகளுடன் தனது வீட்டிலும், அந்த வீட்டின் அருகே உள்ள அடுத்த வீட்டில் மனைவி தனது தாய், தந்தை மற்றும் தனது பிள்ளை ஒருவருடனும் வசித்து வருகின்றார்.
இன்று மதியம் அளவில் அருகருகே வசித்து வந்த இவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து மரணமடைந்த நபரான கணவனுக்கும், மனைவி மற்றும் மனைவியின் தந்தை, சகோதரர்களுக்கு இடையிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கணவரான குறித்த நபரை மனைவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து தாக்கி கோடரியால் கொத்தியும், கத்தியால் வெட்டியும் உள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய பாலையா சுதாகரன் என்பரரே மரணமடைந்தவராவார்.
சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா நீதிமன்ற பதில் நீதவான் தயாபரன் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஓமந்தைப் பொலிசாரைப் பணித்தார். விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஓமந்தைப் பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் என நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா ஒமந்தையில் பதட்டம் : ஒருவர் வெட்டிக்கொலை : நால்வர் கைது
Reviewed by Author
on
September 09, 2017
Rating:

No comments:
Post a Comment