இளையோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கம்
ஏதென்ஸில் நடைபெற்று வரும் இளையோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கம் வென்றார்.
இளையோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கம்
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் இளையோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் 15 வயதான சோனம் மாலிக் ஜப்பான் வீராங்கனை சேனா நகமோட்டாவை எதிர்கொண்டார்.
முதல் பாதி நேரத்தில் சோனம் மாலிக் 2-0 என முன்னிலைப் பெற்றார். 2-வது பாதி நேரத்தில் ஒரு புள்ளியை இழந்தாலும், ஒரு புள்ளி பெற்றார். இதனால் 3-1 என ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு வீராங்கனை நீலம் 43 கிலோ எடைப்பிரிவில் ரோமானியா வீராங்கனையை 6-4 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
இளையோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கம்
Reviewed by Author
on
September 09, 2017
Rating:

No comments:
Post a Comment