வெச்ச குறி தப்பாது...! - கொல்கத்தா போலீஸ் பயிற்சி பள்ளியில் தோனி....
இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக கொல்கத்தாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர் தோனி அங்குள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்கு சென்று துப்பாக்கிசுடும் பயிற்சியை மேற்கொண்டார்.
இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக கொல்கத்தாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர் தோனி அங்குள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்கு சென்று துப்பாக்கிசுடும் பயிற்சியை மேற்கொண்டார்.
ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக கொல்கத்தா வந்துள்ள இருநாட்டு அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி நேற்று மதியம் அங்குள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்கு சென்றார்.
அங்கு 10 மீ, 25 மீ தொலைவிலிருந்து இலக்கை நோக்கி குறிவைத்து துப்பாக்கிசுடும் பயிற்சியில் தோனி ஈடுபட்டார். தோனியின் துல்லியம் பிரமாதமாக இருப்பதாக பயிற்சி பள்ளியின் அதிகாரி ஒருவர் கூறினார். பின்னர், அங்குள்ள அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தோனி புறப்பட்டுச்சென்றார்.
தோனி துப்பாக்கிச்சுடும் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
வெச்ச குறி தப்பாது...! - கொல்கத்தா போலீஸ் பயிற்சி பள்ளியில் தோனி....
Reviewed by Author
on
September 21, 2017
Rating:
Reviewed by Author
on
September 21, 2017
Rating:

No comments:
Post a Comment