சினிமா திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்....
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து வித்யாபாலன் கூறியதாவது: மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக சேர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் திறமைகளை சிறந்த ஒரு உறுப்பினர் என் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன்.
நான் இந்த புதிய அனுபவத்தை எதிர்நோக்குகிறேன். இன்று நாம் வாழும் சமுதாயத்தின் சிக்கல்கள், உணர்திறன்கள், யதார்த்தங்களை எங்கள் சினிமாக்கள் பிரதிபலிக்க அனுமதிக்கும் அற்புதமான கட்டமாகும் என கூறினார். மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பாலக் நிஹலனி பதவி நீக்கம் செய்யப்பட்டு எழுத்தாளர் பிரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கவுதமி, நரேந்திர கோலி, நரேஷ் சந்திர லால், நீல் ஹெர்பெர்ட் நொங்ரிக், விவேக் அக்னிஹோத்ரி, வேமான் கெந்த்ரே, டி.எஸ் நாகபிரான, ரமேஷ் பட்டேஜ்ம்,வாணி திரிபாதி டிக்கோ, ஜீவிதா ராஜசேகர, மிஹிர் பூதா ஆகிய உறுப்பினர்களுடன் வித்யாபாலன் இணைந்துள்ளார்.
சினிமா திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்....
Reviewed by Author
on
September 14, 2017
Rating:
Reviewed by Author
on
September 14, 2017
Rating:


No comments:
Post a Comment