காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலத்தைப் பிற்போட தீர்மானம்
பலவந்த ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். பலவந்த ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்தது. எனினும், அதனை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கு இன்றைய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலத்தைப் பிற்போட தீர்மானம்
Reviewed by Author
on
September 19, 2017
Rating:

No comments:
Post a Comment