ஜெனிவாவில் ஈழ மக்களுக்காக மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள்
ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் போராட்டம் ஒன்று ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நீதி கோரும் மாபெரும் போராட்டம் ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது,
தற்போது ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 2011 இல் அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில், ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, தமிழின உணர்வாளர் வ.கௌதமன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மயூரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுது.
ஜெனிவாவில் ஈழ மக்களுக்காக மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள்
Reviewed by Author
on
September 19, 2017
Rating:

No comments:
Post a Comment