டெல்லியில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் போராட்டம்......
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 65-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் போராட்டம்
புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 65-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி ஊர்வலம் சென்றனர்.
இதுபற்றி போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், ‘விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவ முடியாவிட்டால், அவர்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி விடட்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தார்.
டெல்லியில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் போராட்டம்......
Reviewed by Author
on
September 19, 2017
Rating:

No comments:
Post a Comment