மன்னாரில் முச்சக்கர வண்டி திருத்தகத்தில் திடீர் தீ விபத்து-பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்-(படம்)
மன்னார் செபஸ்தியார் பேராலய பிரதான வீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) இரவு ஏற்பட்ட திடீர் தீ அனர்த்தத்தின் காரணமாக குறித்த முச்சக்கர வண்டி திருத்தகம் முழுமையாக எரிந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் செபஸ்தியார் பேராலய பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த முச்சக்கர வண்டி திருத்தகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் பொது மக்களினால் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதோடு,மக்கள் தீயை அனைக்க முற்பட்டனர்.
இதன் போது பொலிஸார் பௌசர் மூலம் நீரை கொண்டு வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும் குறித்த முச்சக்கர வண்டி திருத்தகம் முழுமையாக எரிந்துள்ளது.
இதன் போது குறித்த திருத்தகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் எரிந்துள்ளதோடு,திருத்தகத்தில் காணப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களும் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருத்தகத்தில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்பது தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் முச்சக்கர வண்டி திருத்தகத்தில் திடீர் தீ விபத்து-பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்-(படம்)
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment