மகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை குடும்பம்....
அண்மையில் ஷார்ஜாவில் இலங்கை குடும்பம் ஒன்று தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மூவர் உயிரிழந்தனர்.ஐந்து பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் தற்கொலை முயன்ற போதும், இரு பெண்கள் காப்பாற்றப்பட்டனர். மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்.
19 வயதான மகன் ஒருவர் வலிப்பு காரணமாக உயிரிழந்த பிரவினாலேயே இந்த குடும்பம் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாக மத்திய கிழக்கு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த குடும்பம் தற்கொலை செய்து கொண்ட போதிலும் இரண்டு சகோதரிகள் மாத்திரம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காப்பாற்றப்பட்ட 17 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்களும் Ibrahim Hamad Obaidalla வைத்தியசாலை கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இருவரின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 55 வயதான ஜே.கே என அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர், பீ.எஸ் என அடையாளப்படுத்தப்பட்ட அவருடைய மனைவி, ஜே.என் என அடையாளப்படுத்தப்பட்ட 19 வயதான மகன் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நிலையில் டி.வன் என அடையாளப்படுத்தப்பட்ட 17 வயதான பெண் மற்றும் பி.வன் என அடையாளப்படுத்தப்பட்ட 27 வயதான பெண் ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி அதிகாலை 2.30 அளவில் ஒருவர் 7 ஆம் மாடியிலிருந்து வெளியில் குதிப்பதை கண்டவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர். இதனையடுத்து பொலிஸாரும் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களும் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றுள்ளார்கள்.
இதன்போது குறித்த வீட்டில் முன்கதவு மூடப்பட்டிருந்த நிலையில் அதனை உடைத்து உள்ளே சென்ற போது பின்புற பகுதியிலிருந்து 54 பெண்ணும் 19 வயதான மகனும் சடலங்களாக காணப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பெண்கள் வெட்டுகாயங்களுடன் இருந்தனர். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய தற்கொலைக்கு முயன்ற இளைஞன் தமது மணிகட்டை கத்தியால் வெட்டிய நிலையில் முதலில் இறந்தமை தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மகன் ஒருவர் வலிப்பு நோயினால் உயிரிழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தமே தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எமது மரணத்திற்கு யாரும் காணரமல்ல, தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளோம் என தந்தை எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குடும்ப உறுப்பினர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு இரு நாட்களுக்கு மகன் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை குடும்பம்....
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment