`மெர்சல்' படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்
`மெர்சல்' படத்தின் திரையரங்கு உரிமையை அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்'.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படத்தின் டிரைலரையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், `மெர்சல்' படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை அட்மஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக ஸ்ரீ தோனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
`மெர்சல்' படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்
Reviewed by Author
on
September 06, 2017
Rating:

No comments:
Post a Comment