"நிலத்துக்குப் போராடுவதா? வாழ்க்கைக்குப் போராடுவதா?
விவசாயம் மற்றும் மீன்பிடியை நம்பி வாழும் மக்களின் வளங்களை இராணுவத்தினர் கையகப்படுதியுள்ள நிலையில் பொருளாதார வசதிகளின்றி வாழும் நாம் சொந்த நிலத்துக்காகப் போராடுவதா? அல்லது நாளாந்த வாழக்கையை கொண்டு நடத்துவதற்காகப் போராடுவதா? என கேப்பாபிலவு மக்கள் கேள்வி எழுப்பினர்.
கேப்பாபிலவு பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் தொடர் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடு விக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தொடர் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
எனினும் தமது போராட்டத்தை பல கஷ்டங்களுக்கு மத்தியிலே அந்த மக்கள் முன்னெடுத்து வருகின்றனர் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
‘காணாமல்ஆக்கப்பட்ட எம் பிள்ளையை தேடுவதா? அல்லது சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதா? ஒன்பது வருடங்களாக காணிகளை இழந்து அவற்றை மீட்கும் போராட்டத்தில் நாம் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை காணிகள் விடுவிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை” எனவும் அவர்கள் கவலையடைந்தனர்.

Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment