உலகின் மிக வயதான பெண்மணி மரணம்: ஜப்பான் பாட்டிக்கு அடித்தது யோகம்....
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்த ஜமைக்கா நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி தனது 117-வது வயதில் மரணம் அடைந்ததால் அந்த இடத்தை தற்போது ஜப்பான் பாட்டி பெற்றுள்ளார்.
ஜமைக்கா நாட்டில் உள்ள மான்ட்டேகோ பே பகுதியில் மின்னல் வேக ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட் வசிக்கும் இடத்துக்கு அருகாமையில் வாழ்ந்துவந்த வயலட் பிரவுன் உலகின் மிக வயதான பெண்மணி என்ற சாதனையுடன் கடந்த ஏப்ரல் மாதம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.
பிறந்ததில் இருந்து ஜமைக்கா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மான்ட்டேகோ பே பகுதியில் உள்ள தனது பூரிவீக வீட்டில் வாழ்ந்துவந்த வயலட்டின் மூத்த மகனுக்கு தற்போது 96 வயது ஆகிறது.
இறைச்சி உணவு வகைகளை தவிர்த்து, மீன், முட்டை, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ரொட்டி மற்றும் பழவகைகளை அதிகமாக விரும்பி சாப்பிட்டுவந்த வயலட் பிரவுன், உடல் நலக்குறைவால் இறந்த தகவலை ஜமைக்கா நாட்டு அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் ஜமைக்கா நாடு அடிமைப்பட்டு கிடைந்த காலத்தில் கடந்த 10-3-1900 அன்று பிறந்த வயலட், கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.
இதையடுத்து, ஜப்பான் நாட்டின் ககோஷிமா பிராந்தியத்துக்குட்பட்ட கிக்காய் தீவில் வாழ்ந்துவரும் நபி தஜிமா என்ற 117 வயது பெண்மணிக்கு உலகின் மிகவும் வயதான பெண்மணி என்ற பட்டம் போய் சேர்கிறது.
உலகின் மிக வயதான பெண்மணி மரணம்: ஜப்பான் பாட்டிக்கு அடித்தது யோகம்....
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment