மன்னாரில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பூரண ஆதரவு-மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித குலத்திற்கு எதிராக மியன்மார் அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை(5) மன்னாரில் இடம் பெறவுள்ள சனநாயாக போராட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியானது தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாவிமானமற்ற செயற்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் அந்த மக்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து படு கொலையினை செய்து வருகின்றனர்.
சிறுவர்,பெண்கள்,கர்ப்பிணிகள்,வயோதிபர்கள் என அனைவரையும் அந்த நாட்டு இராணுவம் கண்மூடித்தனமான முறையில் வெட்டி சித்திரவதைகளை மேற்கொண்டு அந்த மக்களை படு கொலை செய்கினறனர்.குறித்த சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றோம்.
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக பௌத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குறித்த கொடுரச் செயலுக்கு இலங்கையில் முஸ்ஸீம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
இன மதத்திற்கு அப்பால் அந்த மக்கள் மீதாக தாக்குதல்,படுகொலையினை நாங்கள் கண்டிக்கின்றோம்.
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சகல விதமான வன்முறைகளையும் ஊடகங்களினூடாக பார்த்து வேதனை அடைகின்றோம். மியன்மார் அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை (5)காலை மன்னாரில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியானது பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது.
எனவே குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது மக்கள், மனித உரிமை ஆர்வளர்கள், வர்த்தகர்கள் என அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாவிமானமற்ற செயற்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் அந்த மக்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து படு கொலையினை செய்து வருகின்றனர்.
சிறுவர்,பெண்கள்,கர்ப்பிணிகள்,வயோதிபர்கள் என அனைவரையும் அந்த நாட்டு இராணுவம் கண்மூடித்தனமான முறையில் வெட்டி சித்திரவதைகளை மேற்கொண்டு அந்த மக்களை படு கொலை செய்கினறனர்.குறித்த சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றோம்.
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக பௌத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குறித்த கொடுரச் செயலுக்கு இலங்கையில் முஸ்ஸீம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
இன மதத்திற்கு அப்பால் அந்த மக்கள் மீதாக தாக்குதல்,படுகொலையினை நாங்கள் கண்டிக்கின்றோம்.
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சகல விதமான வன்முறைகளையும் ஊடகங்களினூடாக பார்த்து வேதனை அடைகின்றோம். மியன்மார் அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை (5)காலை மன்னாரில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியானது பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது.எனவே குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது மக்கள், மனித உரிமை ஆர்வளர்கள், வர்த்தகர்கள் என அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பூரண ஆதரவு-மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்
Reviewed by NEWMANNAR
on
September 05, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 05, 2017
Rating:

No comments:
Post a Comment