பாகிஸ்தானில்இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து கூறிய கிருஸ்தவருக்கு மரணதண்டனை
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகள் வெளியிட்ட கிருஸ்தவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான பாகிஸ்தானில் அம்மதத்திற்கு எதிராக கருத்து கூறுவது கடும் கண்டத்திற்குறிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும். அவ்வாறான கருத்து வெளியிட்டதற்காக 1990ம் ஆண்டுமுதல் சுமார் 67 பேர் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டில் வசித்துவரும் நதீம் ஜேம்ஸ் என்ற கிருஸ்தவர் முகமது நபிகளுக்கு எதிரான கருத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டதாக அவரது நண்பர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்தாண்டு ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் அந்த நபருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஜேம்ஸின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில்இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து கூறிய கிருஸ்தவருக்கு மரணதண்டனை
Reviewed by Author
on
September 16, 2017
Rating:

No comments:
Post a Comment