அமெரிக்காவில் ஓர் புதிய புரட்சி; ஈழத் தமிழச்சி எடுத்துள்ள புதுவேகம்!
அமெரிக்கா நாட்டின் மேரிலாந்து பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநருக்கான தேர்தல் ஒன்றில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார். உள் நாட்டு யுத்தத்தினால் அமெரிக்காவுக்குப் புலம்பெயெர்ந்து சென்ற குடும்பம் ஒன்றின் வாரீசாகவே கிருஷாந்தி விக்கினராஜா எனும் குறித்த தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.
கிருஷாந்தி இலங்கையில் பிறந்து ஆறுமாதக் குழந்தையாக இருந்தபோது நாட்டில் இடம்பெற்ற போரின் காரணமாக அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்திருந்தது. பின்னர் அமெரிக்காவில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த கிருஷாந்தி மிச்ஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராக செயற்பட்டிருந்தார். கிரிஷாந்தி விக்னராஜா, மேரிலாந்து ஆளுநருக்கான போட்டியில் நுழைவதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிப்புகளை வெளியிட்டு பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். அதிவேக இணையத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதும், 250,000 புதிய தனியார் துறை வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதும், கல்விக்காக ஒவ்வொரு ஆண்டும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதும் கிருஷாந்தியின் தேர்தல் வாக்குறுதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் மேரிலாந்தில் ஆண்களின் சேவைக்கு நிகரான பெண்களின் சேவைகளை உயர்த்துவதும் அவரது திட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 37 வயதான கிரிஷாந்தி விக்கினராஜா கடந்த ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அவரது பாரியாரான முதல் பெண்மணி மிச்ஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராகவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் மாநில செயலாளர் ஜோன் கெரி ஆகியோரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் இங்கே கோடிட்டுக் காட்டக்கூடிய விடயங்களாகும்.
அமெரிக்காவில் ஓர் புதிய புரட்சி; ஈழத் தமிழச்சி எடுத்துள்ள புதுவேகம்!
Reviewed by Author
on
September 21, 2017
Rating:

No comments:
Post a Comment