வவுனியாவில் கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள்
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக கண்ணி வெடியால் பாதிப்படைந்த குடும்பத் தலைவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் சேட் நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (13.09.2017) வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இருவருக்கு வாழ்வாதாரத்திற்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவைச்சேர்ந்த ஆர் .எம் .சந்திரராசா வடக்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஆனந்தராசா பாலசரஸ்வதி ஆகியோருக்கு இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.
இன்று 13.09.2017 வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சேட்நிறுவனத்தின் உளசமூகநிகழ்ச்சித்திட்டத்தினைச் செயற்படுத்தும் களப்பணியாளர்களும் மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு செயற்திட்ட பணியாளர், சேட் நிறுவன களப்பணியாளர்களான திருமதி அ.தயாளினி, திருமதி ஜெ. நிர்மலா திருமதி ச.சுஜாதா,திருமதி உ.மரியகொன்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கரன் மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன், செல்வி கலைவாணி , திருமதி கோமளா மற்றும் ஜனார்த்தனன் , நிப்ராஸ் ,விஜய் , ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர் .
சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களை ஆபத்துக்களைத் தவிர்த்தல் தொடர்பிலும் சேட் நிறுவனம் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் .
கடந்த வருடம் விபத்தால் பாதிப்படைந்த குடும்பத் தலைவர்களுகள் நால்வருக்கு இவ்வகை வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள்
Reviewed by Author
on
September 13, 2017
Rating:

No comments:
Post a Comment