கொரியன் ஓபன் பேட்மிண்டன்: ஜப்பான் வீராங்கணையை வீழ்த்தி பி.வி சிந்து சாம்பியன்
தென்கொரியாவில் நடந்த கொரொயன் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கணை நோஸோமி ஒக்குஹாரா-வை வீழ்த்தி இந்தியாவின் பி.வி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற கொரியன் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து ஜப்பான் வீராங்கணை நோஸோமி ஒக்குஹாரா உடன் மோதினார்.
விரிவிறுப்பாக நடந்த முதல்சுற்று ஆட்டத்தில் முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் பி.வி சிந்து கைப்பற்றினார். இதனால், இரண்டாவது சுற்றில் சிந்து அபாரமாக சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது
இந்நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டத்தில் நோஸோமி ஒக்குஹாரா-வின் ஆவேச டெலிவிரிகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட சிந்து ஓரிரு முறை கால் இடறி சற்று சிரமப்பட்டார். இதனால், வெற்றி வாய்ப்பை சிந்து இழந்துவிடுவாரோ என்ற பதற்றம் மேலோங்கியது. இதனால், சற்று பின்னடைவை சந்தித்த சிந்து, 11-21 என்ற கணக்கில் இரண்டவது சுற்றை இழந்தார்.
எனினும், நாட்டின் கவுரவத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுதாரித்து சிலிர்த்தெழுந்த சிந்து 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்றாவது சுற்றை கைப்பற்றி, தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்று தந்தார். ஜப்பான் வீராங்கணை நோஸோமி ஒக்குஹாரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்தியாவுக்கு மீண்டும் தங்கப்பதக்கம் பெற்று தந்த சிந்துவுக்கு பலதுறை பிரபலங்கள் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கொரியன் ஓபன் பேட்மிண்டன்: ஜப்பான் வீராங்கணையை வீழ்த்தி பி.வி சிந்து சாம்பியன்
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment