வடக்கில் 1000தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை! சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் -
வட பகுதிக்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை. பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு பெண்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டுமென சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடகிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விசேட விதமாக இம்முறை வடகிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்துக்கொள்ளப்பட உள்ளவர்களுக்குரிய பயிற்சி வடகிழக்கிலேயே நடைபெறவுள்ளது.
வடக்கில் 1000தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை! சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் -
Reviewed by Author
on
October 03, 2017
Rating:

No comments:
Post a Comment