அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் மீண்டும் பல இடங்களில் வாள் வீச்சு-10வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்....


வவுனியா பண்டாரிகுளம் (ட்ரான்ஸ்போமர் சந்தி) பகுதியில் வாள் வீச்சு இடம்பெற்றதில் வியாபார நிலையம் ஒன்று உட்பட மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது
 (19 .10.2017) இரவு 7.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்றே குறித்த வாள் வீச்சினை மேற்கொண்டுள்ளதுடன் சீர்த்திருத்தம் மைதானத்தில் நின்ற இளைஞர் குழு மீதும் கண்மூடிதனமான வாள்வீச்சு மேற்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளனர்

வாள்வீச்சை மேற்கொண்டவர்கள் வீதியில் பயணித்த பொதுமக்கள் மீதும் வாள் வீச்சை மேற்கொண்டுள்ளனர் இதில் இரண்டு முச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி சாரதி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதேவேளை வாள் வீச்சை மேற்கொண்டவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது


குறித்த வாள் வீச்சை மேற்கொண்டவர்கள் கூமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்

இதில் குறித்த வியாபார நிலையம் மற்றும் வியாபார நிலையத்திற்கு வந்த நபர் ஒருவருடைய மோட்டார் சைக்கிள் மீதும் வாளால் வெட்டியதில் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை நேற்றைய தினம் மதகுவைத்த குளம் பகுதியில் ஏற்பட்ட வாள்வீச்சில் பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது இதை தொடர்ந்து
- வவுனியா வவுனியா கற்பகபுரம் பகுதியில் ஏற்பட்ட வாள் வீச்சில் பத்து வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது (19 .10.2017) இரவு 9மணியளவில்  வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் எனும் கிராமத்தில் மரணவீட்டின் 45வது நாளிற்குரிய சடங்கின் போது திடீர் என அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று கண்மூடித்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டது இவ் வாள் வீச்சில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து வயது சிறுவனான தர்சன் உட்பட ஐந்து பேர்காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்  வவுனியாவில் அண்மை காலமாக வாள் வீச்சுக்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.






வவுனியாவில் மீண்டும் பல இடங்களில் வாள் வீச்சு-10வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்.... Reviewed by Author on October 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.