கிளிநொச்சியில் 63 ஆயிரம் ஏக்கரில் காலபோக நெற்செய்கை ....
கிளிநொச்சியில் 63 ஆயிரம் ஏக்கரில் காலபோக நெற்செய்கை"
கிளிநொச்சி மாவட்டத்தில் 2017/2018ஆம் ஆண்டுக்குஉரிய காலபோக நெற்செய்கை யின் போது 63 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையை மேற்கொள்ளும் வகையில் முற்கூட்டியே திட்டமிடப்பட்டுப் பணிகள் இடம் பெறுகின்றன என்று மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் வே.ஆய குலன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; எமது மாவட்டத்தில் தற்போது இடம்பெறும் 2017/2018ஆம் அண்டுக்குரியகாலபோக நெற்செய்கையின்போது இந்த ஆண்டில் உச்ச எல்லையாக 63 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அதற்கு ஏற்ற வகையில் நாம் முற்கூட்டியே திட்டமிட்டு அதற்கான
"கிளிநொச்சியில் 63 ஆயிரம் ஏக்கரில் காலபோக நெற்செய்கை -
கிளிநொச்சி மாவட்டத்தில் 2017/2018ஆம் ஆண்டுக்குஉரிய காலபோக நெற்செய்கை யின் போது 63 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையை மேற்கொள்ளும் வகையில் முற்கூட்டியே திட்டமிடப்பட்டுப் பணிகள் இடம் பெறுகின்றன என்று மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் வே.ஆய குலன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது எமது மாவட்டத்தில் தற்போது இடம்பெறும் 2017/2018ஆம் அண்டுக்குரியகாலபோக நெற்செய்கையின்போது இந்த ஆண்டில் உச்ச எல்லையாக 63 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.அதற்கு ஏற்ற வகையில் நாம் முற்கூட்டியே திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் 8 கமநல சேவை திணைக் களங்களின் கீழ் இந்தச்செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் அதிக நிலங்கள் கிளிநொச்சி , புளியம்பொக் கணை, பூநகரி போன்ற கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட பிரதேசங்களிலேயே காணப்படுகின்றன.இவற்றுடன் ஏனைய கமநல சேவை நிலையங்களையும் சேர்த்து 63 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையை எதிர்பார்க்கின்றோம்.
இந்த ஆண்டு இதுவரையும் 20 ஆயிரம் ஏக்கரைத் தாண்டிய விதைப்புக்கள் நிறைவடைந்துள்ளன. மேலும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உழுது பண்படுத்தப்பட்டு விதைப்புக்குத் தயார் நிலையில் உள்ளன.குறித்த நிலத்தின் விவசாயி கள் மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இருப்பினும் அனைத்து விதைப்பு நடவடிக்கைகளையும் இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்யும்போது 63 ஏக்கரை எட்டுவோம்.
இதேநேரம் 2016/2017ஆம் ஆண்டு காலபோக நெற் செய்கையின்போது மாவட்டத்தில் மொத்தமாக 52 ஏக்கர் நெற்செய்கையே மேற்கொள்ளப்பட்டிருந்தது– என்றார்.
கிளிநொச்சியில் 63 ஆயிரம் ஏக்கரில் காலபோக நெற்செய்கை ....
Reviewed by Author
on
October 20, 2017
Rating:

No comments:
Post a Comment