128 பொதுமக்கள் கொத்தாக கொன்று குவிப்பு - ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெறியாட்டம்:
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒரு கிராமத்தை சூறையாடும் நோக்கில் அங்குள்ள 128 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர்.சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ரஷ்யா கூட்டுப்படைகளின் போர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஐ.எஸ்-ன் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள் ஒவ்வொன்றாக கூட்டுப்படைகள் கைப்பற்றி வருகின்றன.
இந்த நிலையில் ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் 400 அப்பாவி மக்களை மனிதகேடயமாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது சிரியாவில் உள்ள Qaryatayn பகுதியில் அப்பாவி பொதுமக்கள் 128 பேரை கொத்தாக கொன்று குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
பலரையும் கழுத்து துண்டிக்கப்பட்டும் துப்பாக்கியால் சுட்டும் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்களை அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் கடந்த 48 மணி நேரத்தில் னடந்திருக்கலாம் எனவும், அந்த கிராமத்தை சூறையாடும் நோக்கில் இந்த படுகொலை நடந்திருக்கலாம் எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் முதல் திகதி முதலே குறித்த பகுதியில் முகாம் இட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள், ராணுவத்திற்கு தங்கள் இருப்பை தெரிவித்ததாக குற்றஞ்சாட்டி, பொதுமக்களை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் 2 பெண்களும் சிறுவர்களும் உள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலைநகராக கருத்தப்பட்டு வந்த ரக்கா வீழ்ச்சிக்கு பின்னர், கடந்த சில மாதங்களாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடும் பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
128 பொதுமக்கள் கொத்தாக கொன்று குவிப்பு - ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெறியாட்டம்:
Reviewed by Author
on
October 23, 2017
Rating:

No comments:
Post a Comment